பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

377


200. நல்லயணியைச் செய்க

பூவிரி உலகில் கலைஞன் ஒன்றைப் படைக்க
நிறைய நேரம் கேட்கிறான்!
ஆயினும் அவன்வேலை மதிப்புடையது!
நாம் எவ்வளவு செய்தோம்?
நாம் அதனை எப்படிச் செய்தோம்?
இவையே பணியின் தரத்தைக் காட்டுவன
பணி செய்வதின் அளவு தரத்தில் இருக்கிறது!
செய்யும் திறன்-சக்தி!
சக்தி திறமைகளைச் சார்ந்தது
உளப்பாங்கான ஈடுபாடும் பொறுத்தாற்றும் பண்பும்
வாழ்க்கையின் தரத்தை உயர்த்தும்!
நினைவுச் சின்னங்கள் கலைஞர்களுக்கு உண்டு!
தூங்கு மூஞ்சிகளுக்கு எதுவும் இல்லை!
நமது பணியிலிருந்து நாம் நழுவாமல் இருக்க,
தடைகள் ஏதும் வராமல் இருக்க -
தடைகள் நிறைந்த வாழ்க்கையில் வெற்றிபெற
ஓயாது உன்பணியைச் செய்திடு!
உன்னைவிட உன்பணி உயர்ந்து விளங்க வேண்டும்!
அவசரம் இழப்புக்களைத் தரும்!
பொருளுக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் கூட!
வாழ்க்கை, வலம் வந்து கொண்டிருக்கும்!

கு-XIV-25.