பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

27



போதும், போதும் விழவொலி! பாட்டும்
போதும், பட்டி மன்றமும் போதும்!
செவிகள் காய்த்துப் போன செய்திகள்
போதும், போதும்" என்றே புகல்வான்
எழுக, வள் ளுவத்தை வாழ்வில் ஏற்றிடுக!
வள்ளுவன் கண்ட புதுமை உலகம்
காண்போம், மாண்புகழ் சேர்ப்போம் இனியே!

கவிஞர்கள் அறிமுகமும்-முடிப்பும்

ஜனார்த்தனம்

'டார்பிடோ' என்றால் தாரணி அறியும்.
அவர்தான் நந்தம் ஜனார்த்தனம் ஆவார்.
நடப்பினுக் கொவ்வா வறண்ட பழமையைச்
சாடும் ஜனார்த்தனம் சந்தத் தமிழால்
தொடங்கித் தந்தார் கவியரங் கத்தையே!

1. கவிஞர் பொன்னிவளவன்

அறிமுகம்:

பூம்பொழில் வளர்க்கும் அன்னைகா விரியைப்
பொன்னி என்றே பூதலம் புகழும்
பொற்புடைத் தமிழால் நற்கவிப் பூம்பொழில்
வளர்த்திடும் புலவர் பொன்னி வளவன்
வள்ளுவன் வானுயர் தலைமைகாட் டுவரே!

முடிப்பு:

பொன்னி வளவன் புகழ்ந்து காட்டிய
தன்னிக ரில்லாத் தலைவனைக் கண்டோம்!
வள்ளுவன் தலைமை வன்முறை யன்று;
கொஞ்சிக் குமையும் கோழைமை யன்று