பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

375


204. முறைமையும் முறைகேடும்

முறையாகச் செய்வதே
சமுதாய முன்னேற்றத்தின் அளவுகோல்!
முன்னேற்றத் திசையின் ஒவ்வோர் அடியும்
 முறைமையிலிருந்து முறைமைக்கேயாம்
முறைகேட்டிலிருந்து முறை கேட்டுக்குப் பயணம்
அழிவேயாம்!
சமூகச் சிக்கல்களுக்குத் தீர்வு, முறை யேயாம்!
முறைகேடு சிக்கல்களைத் தோற்றுவிக்கும்
முறைகேடுகளுக்குப் புதிய துணிகளை உடுத்தினாலும்
உள்ள தோற்றம் மறைவதில்லை!
முறை கேடுகளால் காயங்களைத்தான் மூடலாம்
ஆனாலும், நலம் இழக்கப்பட்டதேயாம்!
முறைமை, முறை கேட்டினை ஏற்காது!
முறை கேட்டை விருப்பம் போல எல்லாம் புனைவு
செய்தாலும்
முறைமை மேலோங்கியே நிற்கும்
முறைமைகள் தோற்றம் இல்லாமல் போகலாம்
ஆயினும் முறைமையே பரிசுகளைப் பெறும்
முறைகேடுகள் சபிக்கப்படுவன.