பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

382

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


205. அன்பு வெற்றிபெறும்

ஞாலம் புகழ் வெற்றிக்குரிய குணம் அன்யே!
உலகமே தோற்றாலும் அன்பு தோல்வியுறாது!
நீ, பலரைத் தாக்குவதன்மூலம் வெற்றிபெற இயலாது!
நீ, பலருடன் சந்தடி செய்வதால் வெற்றிபெற இயலாது!
நீ, பலரைச் சங்கட நிலைகளுக்கு ஆளாக்குவதன் மூலம் வெற்றிபெற இயலாது!
நீ, பலரைச் சுரண்டுவதன் மூலம் வெற்றிபெற இயலாது!
நீ, பலரை அச்சுறுத்தியும் வெற்றிபெற இயலாது.
நீ அவர்களை உன் அன்பினால் உலுக்கி
அவர்களை உன்பால் ஈர்க்கலாம்!
அன்பினால் இயலும் சாலும்!
அரசியலும் காரணங்களும் பயமும் தோற்கும்
அன்பு வெற்றி பெறும்!
தகுதியின்மை, தகுதியைப் பெறப் போராடும்!
போராட்டத்துக்கு அரசியல் ஏன்?
காரணங்கள் அடிக்கடி சந்திக்கும்!
ஆனாலும்,
அன்பு, இக்காரணங்களைப் புறத்தே தள்ளும்!
அடிக்கு அடி என்பது நியதியாகாது!
அன்பு, அன்புள்ளங்களைக் காணும்!
அன்பு, காரணங்களைத் தேடாது!
அன்பு, வேற்றுமைகளைப் பாராட்டது!
அன்பு, வேறுபாடுகளும் காட்டாது. உணர்க!
விவாதங்களுக்கு அவசியம் இல்லை! அறிவுக்கு
அவசியமில்லை!
காரணங்களும் அவசியமில்லை - பயப்படுவதற்கு!
பயம் ஏன்? அன்பு இல்லை! அதனால் பயம்!
அன்பைக் காட்டுக! வெற்றி பெறுக!