பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

392

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


214. தடைகளே படிகள்!

ஓ! நெஞ்சமே! நன் நெஞ்சமே! கேள்!
விவரிக்க இயலாத பாதுகாப்புக்கு வழி இதோ!
இதை நான் செய்தேன்! இது நான் செய்த முயற்சி!
 இதை நானே செய்து முடித்தேன்
என்ற பெருமை பெற வேண்டுமா?
எடுத்த முயற்சிகளில் தடைகளைக் கடந்து
வெற்றிபெற வேண்டுமா?
தன் ஆற்றலை விஞ்சிய தடையா?
தயங்கற்க! தொடர்ந்து செய்தால் வெற்றியைப்
பெறுவாய்!
கீழே வீழ்த்தப்பட்டாயா? கீழே வீழ்ந்தாயா?
விட்டுக் கொடுக்காதே! எழுந்து நில்!
மெதுவாகவும் நடைபோட முடியவில்லையா?
நின்று கொள்! பெருமூச்சுவிடு! சீர் செய்து கொள்!
ஆனால், ஒரு போதும் சரணடைந்து விடாதே
வெற்றி, கடைசியாகப் போய்த் தட்டினாலும் கிடைக்கும்!
ஆனால், களத்திலிருந்து வெளியேறி விடாதே!
வெற்றி வாகை சூடியவர்கள்
ஒரு நாளில் அல்ல!
மற்றவர்கள் தூங்கும் பொழுதும்
ஓயாது உழைத்தவர்களே வெற்றி பெற்றனர்!
எடுத்தபணி முடியும்வரை தொடர்ந்து செய்
தடைகளைப் படிகளாக்கி
முன்னேறு! முன்னேறு!