பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

393


215. காலகாலனே காத்திரு

உலகு புகழ் வள்ளுவம் உணர்த்தியது
நேற்றிருந்தவன் இன்றில்லை என்று!
ஏ! உலகமே! காலமே!
காலகாலன் எம்தலைவன்!
உனக்கு ஒரு வேண்டுகோள்!
சாவதற்கு அஞ்சவில்லை!
"இறப்பதற்கு என் கடவேன்? - இஃது எம் எண்ணம்!
ஆயினும்,
தொடங்கிய பணி முடியும்வரை காத்திரு!
அருமை இளவரசின் பயிற்சிக் காலம் வரை காத்திரு!
வேண்டுவது பல ஆண்டுகளல்ல!
சில ஆண்டுகளேயாம்!
கடமைகளை முடித்து நாமே நின்னை அழைப்போம்!
நின்னைத் தொடர்வோம்!
கடவூர் மயானம் தந்த பெருமானே
பூரணமாக முடிக்கத் துணை செய்!

கு.XIV.26.