பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

29


முடிப்பு:

        பூங்குன் றன்புக விட்ட தோர் பள்ளி
        படிப்பினைத் தந்தது பண்பையும் தந்தது.
        உலகிற் கோர்ஆ சிரியன் வள்ளுவன்
        சூழும் துன்ப மதனைக் கண்டு
        கசடெது? என்றே அறியச் சொன்னான்.
        அகத்தின் "கசடறக் கற்பவை கற்க,
        கசடறக் கற்க” என்றறி வுறுத்தான்.
        உளுந்துப் பானை யெனவும் உப்புப்
        பானை யெனவும் எண்ணிப் பாடம்
        படித்தத னாற்பயன் என்னகை கூடும்?
        "அறியாமை நீங்க அறிவதே அறிவு"
        இதுவே வள்ளுவன் தந்து படிக்கச்
        சொல்லிய தோர்முதற் பாடம் ஆகும்.
        "அறிவுதான் ஆவது அறியும்" இதுவே
        வள்ளுவன் அறிவுக்கு வகுத்த இலக்கணம்
        அறிவுதான் உலகின் அவலம் ஓட்டும்
        விண்ண கத்தினை மண்ணிலே காட்டும்
        என்ற வள்ளுவன் பாடத் திற்குப்
        பூங்குன் றன்இவண் பொழிப்புரை புகன்றார்
        பூதலத் தீர்புகழ் புரிவீர்! புகழினைக்
        கொள்ள தீர்இது வள்ளுவன் கூற்றே!

3. கே.சி.எஸ். அருணாசலம்

அறிமுகம்:

        உறைக்குள் வாளது ஒடுங்கும் ஆயினும்
        வீரன் வாளினைக் கையில் ஏந்தினால்
        சிதறி வீழ்வர் திறமிலா மாக்கள்
        கவிதைவாள் கொண்டு பழமையை வீழ்த்தும்