பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

398

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


220. குன்றக்குடியே!

குன்றக்குடியே!
நீ, குன்றாக்குடியாவது எப்போது?
அறுமுகச் செவ்வேளைப் பாடவந்த அருணகிரி,
உன்னை, உன்மக்களைப் பழித்துப் பேசி விட்டான்!
சூடும், சுரணையும் இருந்தால்
அருணகிரியாரின் பாட்டைப் பொய்யாக்கிப்
பூவுலகில் புகழ்பெற்று விளங்க வேண்டும்!
இன்று,
குன்றக்குடியைச் சார்ந்தார் சிலருக்குப் புகழ் உண்டு!
ஆயினும் அது போதாது!
குன்றக்குடி ஊர் - ஊர்மக்கள் செழித்து வளர வேண்டும்
புதியதோர் ஊராக உருப்பெற வேண்டும்!
இது கனவு!
இல்லை, இல்லை - நினைவு!
முயற்சிகள் நடந்ததுண்டு! ஆனால், முனைப்பில்லை!
தொடக்கங்கள் நடந்ததுண்டு! ஆனால் தொடர்ச்சி
இல்லை!
ஏன்? எதனால்?
பணிகள் மிகுதி காரணம்!
தோளொடு தோள் கொடுத்தோர்
தொடர்ந்து பங்கேற்க வில்லை!
அகல்விளக்குகள் ஆயிரம்,
ஒரு துரண்டாமணி விளக்குக்கு ஈடாமோ?
நமது தோளில் சுமை கூடுகிறது!
நம்முடன் இருப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
பிறப்பது ஒரு தடவைதான்!
அந்தப் பிறப்பிலேயே சாதனை செய்ய வேண்டும்!
சாதனைகள் செய்யும் திறம் உடையவர்கள்