பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

399


ஆயினும், உறையுள் போட்ட வாளென வாழ்வது ஏன்?
குடத்தில் எரியும் விளக்கென வாழ்வது ஏன்?
நாம் தங்களுடன் இருந்து
உழைக்குமாறு உள்ள நாள்கள் சிலவே உள்ளன!
இனி எஞ்சிய நாள்களில் உங்கள் ஒத்துழைப்பைத்
தொய்வில்லாமல் நல்கினால்
குன்றக்குடி புதிய ஊராகும்!
நாம் அனைவரும் கூடி உழைத்தால் ஆகாதது இல்லை!
நீங்கள் அனைவரும் இந்த மண்ணின் மைந்தர்கள்!
வந்த நம்மை வரவேற்றிர்கள்!
மேலும் ஒத்துழைப்பு நல்கி
தயவும் தாட்சண்யமும் இன்றி!
வேலைவாங்கிச் சாதனைகளைச் செய்ய
உடனிருந்து உதவி
கடைசிப் பயணத்தின்போது
நீங்கள் அனைவரும் அருகில் இருக்க,
சிரித்த முகத்துடன் அமைதியாகப்
பயணத்தைத் தொடங்கி வைக்க வேண்டும்!
இது நமது வேணவா! -
இனி நாம் வாழும் ஒவ்வொரு நாளும் ஒராண்டே!
கவனத்தில் கொள்க! கவலையை மாற்றுக!