பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

402

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




223. இதயக் கதவு திறந்திருக்கிறது!


"வேறுபாடுகள் இயற்கை".வேறுபாடுகளே வாழ்வியலை அமைக்கின்றன.
நெருப்பும் நீரும் தம்முள் முரண்பட்டவை!
ஆயினும், மனிதகுல நலம் நாடி உறவு கொள்கின்றன நெருப்புக்கும் நீருக்கும் உறவில்லையானால்
சமையல் ஏது? சாப்பாடு ஏது?
உடலை இயக்கும் ஐம்பொறிகள் ஐந்து நிலையின. ஆயினும் உடலைக் காப்பதில் ஒருமை காட்டுவன: ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பன!
இப்பண்புகள் மனிதருள்ளும் வளர்ந்தால்
வம்புகள் வாரா! கலகங்கள் குறையும்!
நாட்டு நலனே நமது நலனும் என்று
நாட்டம் கொண்டால் ஒருமை உருவாகும்!
வாழும் சில நாளில் யார் பெரியர்? யார் சிறியர்?
ஏன் இந்தப் போராட்டம்?
தகுதியுடையது முடிசூட்டிக் கொள்கிறது,
இராமனைப் போல!
ஆனால், இராமன் தலையில் முடி அடையலாம் ஆயினும், மகிழ்ச்சி எல்லாருக்கும்! -
வெற்றி - தோல்வி என்ற சொற்கள் பயிலும் வரை ஆன்மா வளராது ஒருமைப்பாடு உருவாகாது
ஒப்புரவு நெறி, வாழ்க்கை நெறி ஆகாது.
அமரம், அமரத் தன்மையுடையது.
நும் முன்னோரின் விழுப்பம் கண்டே'
தொண்டைமான் இங்கு நமது மடத்திற்கும் திருக்கோயிலுக்கும் பணிபுரிக என அனுப்பி வைத்தார்.