பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

404

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



224.ஊழே! ஊழே!

ஊழே! ஊழே! உன் முகவரி என்ன?
பகுத்தறிவு படைத்த மனிதன்
நின்னைக்கண்டு அஞ்சுகிறானே!
அப்படி என்ன நீ ஒர் அரக்கனா? இல்லை, இல்லவே இல்லை!
'ஆகூழும் உண்டு என்ற வள்ளுவம் உணராதார்
நின்னைக் கண்டு அஞ்சுகின்றனர்! :
ஊழே! உன்னோடு பலகாலும் அர்த்தமுள்ளதாக
வாழ்ந்த எனக்கு உன்னைப் புரிகிறது!
ஊழே! நீயே என்னுடைய படைப்புத்தானே!
என் கை பிள்ளையார் பிடிக்க நினைத்தது!
ஆனால், மனமோ குரங்கைப் பற்றி எண்ணியது
எது பிடிக்கப் பெறும்? -
பிள்ளையாரா? இல்லை, இல்லை! குரங்குதான்!
ஏன்? நினைப்பே வெற்றி பெறும்! .
 ஊழே, நீ எனக்கு உற்ற தோழன்!
அதுவும், திருவருட் சிந்தனையுடன்
கைவருந்தி உழைக்கும் இயல்பு பெற்றிடின்
ஊழே நீ ஒதுங்கிக் கொள்வாய்!
அல்லது ஆகூழாக மாறி உற்ற துணையாக இருந்து
வாழ்க்கையைச் செலுத்துவாய்!
ஊழே, நின்பால் தீதில்லை!
வாழத் தெரியாதவர்கள் - மடிபோற்றும்
                                               மதியில்லாதவர்கள்
நின்மீது பழிபோட்டுவிட்டு ஊர்சுற்றுகிறார்கள்!
ஊழே வாழி! நல்லுரழே வாழி!
ஊழே உனக்குரிய காணிக்கை உழைப்பே!
அயர்விலாத ஆள்வினையை - வளரும் உழைப்பினை
உழைப்பைச் சுற்றியே அமையும்
எம் வாழ்க்கை நினக்கு அர்ப்பணம்!