பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

405



225. இறைவா, உதவியாளராக வா!


எமையாளும் ஈசனே! எந்தையே!
தாயிற் சிறந்த தயாவுடன்
 நீ வழங்கிய இனிய கொடைகள் பலப்பல!
நீ வழங்கியருளிய அனைத்தையும்
ஆற்றும் திறனும் பேணும் திறனும் துய்க்கும். திறனும்
இன்றி அவலப்படும் அடியேனைக் கண்டிடவில்லை.
"ஒன்றே குறிக்கோள்! ஒரே குறிக்கோள்!"
என்றனர் அறிஞர்.
அறிந்தோ அறியாமலோ எண்ணில் பல
குறிக்கோள் கொண்டனம்!
ஆயினும் என்?
எந்த ஒன்றிலும் வெற்றியில்லை!
ஏன்? குறிக்கோள் பலவாயின;
செயற்பாடு குறைகிறது.
ஆக்குவதும், சுவைபார்ப்பதும், விருந்தயர்தலும்
ஒரு நேரத்தில் செய்ய இயலாது
ஆக்கும் பணி, அலுவலகப் பணி
சுவை பார்த்தல் உயர் அலுவலர் பணி
விருந்தயர்தல் அனைவர்க்குமுரியது!
இந்தப் பணிப் பகிர்வு பயனுடைய வகையில்
நடக்கவில்லையே! -
உற்ற தோழர் தோளோடு தோள் கொடுப்பார்
                                                      இல்லையே!
பழகுவோர் பலருண்டு; பணியாளர் பலருண்டு!
பார்வையாளர்போல் வருவோர் பலருண்டு!.
காரியமே கண்ணாக நிற்போரும் உண்டு. என்ன பயன்?