பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4



சிறுகதைகள்

1. மெளனப் புரட்சி

புதுரர் ஒரு சிற்றுார். வளம் கொழிக்கும் சிற்றுரர். பிச்சாண்டியா பிள்ளையின் குடும்பம் அந்த ஊரில் பெரிய குடும்பம். காணி, பூமி நிறைய உண்டு. பிச்சாண்டியா பிள்ளை நல்ல மனிதர். உதார குணமுள்ள மனிதர். ஆயினும் பரம்பரைப் பழக்கங்களில் ஊறிப்போனவர். பண்ணையாள் மொட்டையனிடத்தில் தனி அன்புடையவர். மொட்டையன் தாழ்த்தப்பட்ட வகுப்பினன் என்பதால் தீண்டாமை மட்டுமே அனுஷ்டிப்பார். ஆனால் பண்ணையாருக்கு மொட்டையன், கிராம விவகாரங்களில் ஒரு வலக்கை பண்ணை விவகாரங்களில் ஆலோசகன்.

பண்ணையாளின் ஒரே மகன் சிவநேசன், சிவநேசனுக்கு மொட்டையன் வளர்ப்புத் தந்தைபோல. அவ்வளவு பாசம். பண்ணையாரின் கண்டிப்புகள் பலன் தரவில்லை. சிவநேசன்-மொட்டையன் உறவு வளர்ந்தது.

மொட்டையனுக்கு ஒரே மகள் பூங்கொடி. பூங்கொடியைவிடச் சிவநேசன் ஒரு வயது மூத்தவன். பால பருவத்துச் சிவநேசனும் பூங்கொடியும் நெருங்கி விளையாடினர். பண்ணையாருக்கு இது பிடிக்கவில்லை! சத்தம் போடாமல் சிவநேசனைப் பட்டணத்திற்குப் படிக்க