பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

414

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


புதன்கிழமை காலை பத்து மணியளவில் பண்ணையார் தெரு முகப்பில் உள்ள பிள்ளையார்க் கோயிலில் ஆண்களும் பெண்களும் கூடியிருந்தனர். சிவநேசன் வண்டியிலிருந்து இறங்கி முறைப்படி பிள்ளையாரைக் கும்பிட்டுவிட்டு, ஊரார், உற்றார் அனைவருக்கும் தரையில் வீழ்ந்து வணக்கம் செய்தான். கூடியிருந்தவர்கள் உருகிப் போயினர். “பாருங்கள் ! பண்ணையார் பிள்ளை, என்றால் பண்ணையார் பிள்ளைதான்! என்ன அடக்கம்!” என்று பெண்கள் பேசிக் கொண்டனர்.

சிவநேசன் நான்குபுறமும் பார்த்துக் கொண்டே தன்னுடைய இளம் வயதுத் தோழர்களுக்குப் புன்முறுவலை உதிர்த்துக் கொண்டும் தோளில் கை போட்டுக் கொண்டும் வீட்டை நோக்கி நடந்தான்

தன் வீட்டுக்கு அருகாமையில் உள்ள மாட்டுக் கொட்டகை வாசலுக்குப் பக்கத்திலுள்ள ஜன்னலுக்குள்ளி ருந்து இரண்டு கண்கள் வைத்த விழி வாங்காமல் தன்னைப் பார்ப்பதைச் சிவநேசன் பார்த்துவிட்டான் ! அந்தக் கண்களுக்குரிய உருவம் சுவர் பாதியும் மூதாட்டி பாதியுமாக மறைந்திருந்த கொடுமையை நினைத்துப் பெருமூச்சு விட்டான்.

சாளரத்தில் தென்பட்ட கண்களும் சிவநேசன் கண்களும் சந்தித்துக் கொண்டன; பேசிக் கொண்டன.

சிவநேசன் நேரே தந்தையிடம் சென்று வணங்கினான். பண்ணையாரால் பேசமுடியவில்லை. மகனை அணைத்துக் கொண்டு அழுதார். அழுகை, அவல அழுகையல்ல, இன்ப அழுகை!

மதியம் ஊர் விருந்து முடிந்தது.

மாலை நேரம் வந்தது. சிவநேசன் தந்தையின் அருகில் அமர்ந்தான். தாயும் பக்கத்தில் நின்றாள். பண்ணையார்