பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

31


        புரட்சியைக் கண்டு புதியதோர் உலகம்
        சமைத்தனன்! அத்தகு தோழமை உலகில்
        தோய்ந்த நெஞ்சினர் கேண்மை மிகுந்த
        கே.சி.எஸ். அருணா சலம்.வள் ளுவனை
        நண்ப னாக்கி நடமாடச் செய்வார்
        தோழமை என்பது வாழ்வின் சமமே!

முடிப்பு:

        கேளிர் எனத்திகழ் நண்பர் கே.சி.எஸ்.
        அருணா சலம்இங் குணர்ந்து காட்டிய
        உழுவ லன்புடை உற்ற நண்பன்
        வள்ளுவன் தன்னைக் கண்டோம்! வள்ளுவன்
        நட்பது இனிய நட்பே! உற்றுழி
        உதவும் நட்பு முகமல்ர்ந் தேய்க்கும்.
        நட்பது வன்று அகமலர்ந் துவக்கும்
        நிலைத்த நட்பாம் வள்ளுவன் நட்பே!
        காதலிற் சிறந்தது கவினுறு நட்பே
        வள்ளுவன் என்ற நண்பனைப் பெற்று
        நாட்டினில் சிறப்பினை எய்துவோ மாக.


4. கவிஞர் ஆத்மநாதன்

அறிமுகம்:

        ஆத்ம நாதன் அறிவுடை நம்பி
        இன்புறு நல்ல கவிஞர்.வள் ளுவரைத்
        தாயாய்க் கொண்டு தமிழ்க்கவி பாடுவார்!
        ஊனுடை உடலில் உணர்வது நிறைந்த
        உயிரையும் ஒருங்கே வளர்ப்பவள் தாயே!
        நந்தம் வள்ளுவன் ஆன்மா விற்கும்
        அழகிய வடிவம் தரும்தாய் என்றே