பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறுகதைகள்

423


4

ன்னகாமுப் பிள்ளைக்கு நாய் வளர்ப்பில் விருப்பம் அதிகம். நல்ல நாய் ஒன்றை வளர்த்து வந்தார். வேளா வேளைக்குச் சோறு, மற்ற வசதிகளுடன் கட்டிப் போட்டு வளர்த்து வந்தார். தெருவில் ஓடியாடித் திரியும் நாய்களைக் தண்டால் அன்னகாமுவின் வளர்ப்பு நாய்க்கு அழுக்காறு தோன்றும். அந்த ஊர் நாய்களைப் போல் சுதந்தரமாகத் திரிய முடியவில்லையே என்ற கவலை!

ஒருநாள் - அன்னகாமுப் பிள்ளை இல்லாத நேரத்தில் நாய், தன் தலைவழியாகக் கழற்றிக் கொண்டு ஓடிவிட்டது. எங்கு ஓடியது: ஊர் நாயுடன் கூடித் திரிய! ஊர் நாய்களின் கட்டத்தில் சேர்ந்து கொண்டது! ஆனால் ஊர் நாய்கள் இதன் புதிய வரவை ஏற்க மனமல்லாமல் உறுமின! இந்த நாய்க்கோ அச்சம்! குப்பை ஓரத்தில் படுத்துப் புரண்டு "சுக"த்தை அனுபவித்தது.

அன்னகாமுப் பிள்ளை வந்தார். தனது வளர்ப்பு நாயைக் காணாமல் தேடினார். கடைசியாகக் கொல்லைப் புறத்தில் குப்பை மேட்டில் புரண்டு கொண்டிருப்பதைக் கண்டார். நாய்க்கு, குப்பை மேட்டை விட விருப்பம் இல்லை. ஊர் நாய்க் கூட்டத்தைப் பிரியவும் மனம் இல்லை. அன்னகாமுவிடம் வளர்ந்த பாசம்! அதே போழ்து அச்சம்! இப்படி ஒரு ஊசலாட்டம்! அன்னகாமுப் பிள்ளை பரிதாபத்துடன் தனது வளர்ப்பு நாயைக் கட்டித் துரக்கி வந்து குளிப்பாட்டிப் பாற்சோறுாட்டினார்.

ஆன்மாவாகிய நாய், இறைவனாகிய வளர்ப்புத் தந்தையால் பொன், பொருள், போகம் முதலியன புணர்த்தி வளர்க்கப் பெறுகிறது. ஆயினும் ஆன்மா, உலகியல் என்ற ஊர் நாய் சேர்க்கையில் சேருகிறது. இறைவன் திருத்தி ஆட்கொள்கிறான்!

ஊர் நா யென வாழ்தலினும்
வளர்ப்பு நாயென வாழ்தல் நன்று.