பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறுகதைகள்

425



6

பாலசுப்பிரமணியம் ஒரு இளைஞர் வீட்டுக்கு ஒரே மகனாகப் பிறந்தவர். அதனால் செல்லமாக வளர்க்கப் பெற்றவர். வீட்டில் அவர் நினைத்ததுதான் சட்டம்! நடத்தியதுதான் வாழ்க்கை! கடுங்கோபம் வரும்! முரட்டுத் தனமே உருவென வளர்ந்தார். இவ்வளவுக்கும் அவனுடைய தாய் லட்சுமியே காரணம். தாய்க்கு முரட்டுக் குணம் ! தாய் லட்சுமி குடிப்பாள்! வீட்டின் பணத்தை எடுத்து பைசாவுக்குப் பைசா வட்டிக்குப் பணம் கொடுப்பாள்!,

பாலசுப்பிரமணியனுக்குத் திருமணம் நடந்தது. திருமகள் என்ற பெண் வாழ்க்கைத் துணையானாள்! மனையறம் தொடங்கியது! மாமியார் லட்சுமி மனைவியாக இருந்த பொழுதே கணவனை ஆட்டிப் படைத்தவள்! மாமியார் பதவி கிடைத்து சும்மா இருப்பாளா? மாமியார் பதவி அதிகாரமுடைய பதவி! மாமியார் அதிகாரத்தை முழுமையாகச் செலுத்தினார். செல்லப்பிள்ளை பாலசுப்பிரமணியன் "தாய் சொல்லைத் தட்டாதே" என்ற வாசகத்தை நினைத்துக் கொண்டு மனைவியை வாழ்க்கையின் கூட்டாளியாக நினைக்காமல் இரண்டாந்தரமாக நடத்தினான்! வீட்டு வேலைக்காரியாக நினைத்து நடத்தினான்! இவ்வளவையும் அந்தப் பெண் பொறுத்து நடந்து கொண்டாள்!

திருமகளின் பொறுமை, பாலசுப்பிரமணியத்தின் மனத்தையும் மாமியாரின் மனத்தையும் மாற்றவில்ல்ை. மாறாகப் "பயந்தாங் கொள்ளி," "அடிமை” என்றே நினைத்தார்கள்! ஆனால் பாலசுப்பிரமணியம் அவளை மனைவியாகப் பயன்படுத்தத் தவறவில்லை! இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக்கினான்! அப்போதும் - குழந்தைகள் பிறந்த பிறகும் பால சுப்பிரமணியத்தின் குணம் மாறவில்லை. நிலைமை முற்றியது.

கு.XIV.28