பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


        வடித்துக் காட்டும் ஆத்ம நாதனின்
        நயப்புறு கவிதைச் சுவைநலம் பருகுவோம்!

முடிப்பு:

        எம்மருந் தாய்எனை ஈன்றவள் ளுவத்தாய்
        பசப்புறு உடலின் புணர்ச்சியால் ஈன்றாள்
        இல்லை! அவள் அறிவறிந்து பெற்ற
        மகன்யான்! ஈன்று புறந்தரல் ஒன்றே
        கடனெனச் சொன்னார். வள்ளுவத் தாயோ
        ஈன்று புறந்தந் தெம்மைப் பேணி
        வளர்த்துப் பெருமை பலப்பல சேர்த்து
        அழிவிலா இன்பத்தில் ஆழ்த்தும்தா யானாள்!

5. கவிஞர் குடியரசு

அறிமுகம்:

        முதுல கத்தினில் முடியர சொழிந்து
        குடியர சோங்கி வளரும் நாளிது!
        இங்கே குடியர சேவரு கின்றார்.
        குடியர சதனில் எல்லோரும் ஒர்குலம்
        ஆங்குயர் வில்லை; தாழ்வு மில்லை!
        ஆனால், இந்தக் குடியர சிங்கே
        உலகு புகழும் உயர்வள் ளுவனை
        உத்தமச் சேவக னாக்க வருகிறார்!

முடிப்பு:

        வள்ளுவன் தன்னைச் சேவக னாகக்
        கொண்டால் வாய்ப்பேச் சதற்கிட மில்லை!
        குறிப்பிற் குறிப்பறி வள்ளுவன் அன்றோ?
        கோபமும் தாபமும் அவனிடம் இல்லை!
        ஏவா மற்பணி இயற்றுநற் சேவகன்.