பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறுகதைகள்

431


மாறனுக்குப் படிப்பில் ஆர்வம் இல்லை. பத்தாம் வகுப்பு வரையில் கூட ஆசிரியர்களுடைய பணிப் பாதுகாப்பின் அடிப்படையில்தான் வந்தான்! பத்தாம் வகுப்பில் தோற்றுப் போனான் !

வீட்டில் வறுமை; தந்தைக்கு முன்போல் உழைக்க உடல்நலமில்லை. தாய்க்கும் கூலி வேலைதான்! வாழ்க்கை நெருக்கடிக் காளாயிற்று! மாறனுக்கோ வீட்டின் நெருக்கடி புரியவில்லை; புரிந்து கொள்ளவும் முயற்சி இல்லை! காலையில் சுயமாக முகத்தை மழித்துக் கொள்ளல், இரவு நீலச் சலவைகட்டிப் போட்டு உலர்த்திய உடுப்புக்களை உடுத்துக் கொள்ளல், ஊர் சுற்றுதல், வேளைக்கு வேளை தவறாமல் வந்து உண்ணுதல் என்ற பழக்கத்தினை உடையவனாக மாறன் வாழ்ந்தான். தாய் பலமாதங்கள் பொறுத்துப் பார்த்தாள் தாயின் மனம் அல்லவா? ஆயினும், அவள் என்ன செய்வாள்? வீட்டின் நிலை அவளைத் தூண்டிற்று! நெருக்கடி வயப்பட்டாள்! மாறனைப் பார்த்து "ஏதாவது சம்பாதிக்க வேண்டாமா? உங்க அப்பாவும் முடியலேன்னு மூலையிலே படுத்திட்டாரு! என் ஒருத்தி பாடு எதற்கு ஆகும், அரிசி கிலோ அஞ்சு ரூபாய்னு விற்கிற போது?" என்று கேட்டாள். மாறன் சில நாள்கள் மெளனம் சாதித்த பின் "நான் வேலை பார்க்க மாட்டேங்கறே! வேலை கிடைத்தால்தானே!” என்று அம்மாவை எதிர்த்துப் பேசத் தலைப்பட்டான் வேலையும் தேடினான்!

அவன் விரும்பிய வேலை, கை நகத்தில் அழுக்குப் படியாத வேலை - அரசாங்க வேலை! அது கிடைக்கவில்லை. அரசாங்க வேலை கிடைப்பது அவ்வளவு எளிதா? அதற்குரிய விலையை மாறன் எப்படி கொடுப்பான்? பல மாதங்கள் உருண்டோடி விட்டன வேலை கிடைத்த பாடில்லை! மாறனின் தாய் தையலைக்கும் தள்ளாமை வந்து விட்டது! அவளால் முடியவில்லை! ஒருநாள் அவள் சமைக்க வில்லை! மாறன் வந்தான்! சோறு கிடைக்கவில்லை! தாயார்