பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறுகதைகள்

433



"நீ, படித்திருக்கிறாயா?"

"ஆம், ஐயா! பத்தாவது வரை படித்திருக்கிறேன்! பத்தாவதில் தோல்வி!"

"ஏதாவது தொழில் செய்யும் முயற்சி!"

"ஒன்றும் தெரியாது ஐயா!"

"அதுசரி!..! உனக்குக் கைகள் உள்ளனவா?

"ஐயம் என்ன ஐயா !”

"உழைக்கும் கைகள் தானே...!"

மாறன், வெட்கத்தால் தலையை மெள்ளச் சாய்த்தான்!

"உனக்கு உள்ளம் இருக்கிறதா என்று கேட்டார் பெரியவர்.

"ஐயா, அப்படியென்றால்?” என்றான் மாறன்.

"உன்னுடைய சங்கடத்திலிருந்து நீங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாயா?

"ஆம், ஐயா !” -

"அதற்குரிய முயற்சியில் ஈடுபடத் துரண்டும் உள்ளத் தினை - மனத்தினைப் பெற்றிருக்கிறாயா?

"இருக்கு ஐயா! ஆனால் இல்லையென்று சொல்லக் கூடிய அளவுக்குத்தான் இருக்கிறது!”

"மாறா! எதைப்பற்றியும் கவலைப்படாதே! அழாதே! அயர்ந்து உட்காராதே! உள்ளக் கிளர்ச்சியைத் துரண்டிக் கொள்க! உள்ளத்தைப் பெறுக! கிடைத்த பணி எதுவானாலும் செய்க! அதனைக் கொண்டு மற்றப் படி களைக் கடந்து மேலே ஏறுக! ஏறுக! நினைத்தவையெல்லாம் நடக்கும்! வறுமை உன் வீட்டிலிருந்து வெளியேறும்!.ம். எழுந்திரு உள்ளத்தினைப் பெறுக!

"உள்ளம் உடைமை, உடைமை"