பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

434

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



11

புண்ணியகோடி மிகவும் நல்லவர். பள்ளியிறுதி வரை படித்தவர்; நடுத்தரக் குடும்பத்தினர் உழுவித்து உண்பவர். வளமும் இல்லை - வறுமையும் இல்லை! நிறைய நேரம் உண்டு! இந்த நேரங்களில் தமிழறிஞர்களுடன் கலந்துரையாடி மகிழ்வார்; திருக்குறள் படிப்பார். ஒருநாள் ஒரு தலைமுறைப் பாவலரிடம் திருக்குறளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்”

(குறள்-61)

என்ற திருக்குறள் பற்றிக் கலந்துரையாடல் நிகழ்ந்தது.

பாவலர் திருக்குறளுக்கு வெள்ளைப் பொருளாக, "ஐந்து பொறிகளை அவித்தவன், இறைவன் நெறி நின்று ஒழுகுபவன்" என்று பொருள் கூறினார். "அவித்தல்" என்பதற்கு அடக்கல் என்று பொருள் கூறினார். மேலும் அடக்கல் என்பதற்குத் துய்க்காமை என்றும் அனுபவியாமை என்றும் கற்றுக் கொடுத்தார். அப்பாவி புண்ணியகோடி அன்று முதல் நற்காட்சிகளைக் காண்பதில்லை. இருட்டறையிலேயே காலத்தைக் கடத்தினார். காதுகளால் கேட்பதில்லை. சுவையுள்ள உணவு உண்பதில்லை. எதையும் முகர்வதில்லை. மனைவியுடன் பேசுவதில்லை என்று நோன்பு கொண்டார். வாழ்க்கை இருளைக் கவ்வியது! உடல் நோயுற்றது! கவலை ஆட் கொண்டது!

புண்ணியகோடிக்கு மருத்துவம் செய்ய ஒரு நாட்டு மருத்துவர் அழைக்கப் பெற்றார். அம்மருத்துவர் புண்ணிய கோடியின் உடலை ஆய்வு செய்து நோய் பற்றி அறிந்தார். நோயின் காரணம் கண்டறிய முற்பட்டார். கண்டு கொண்டார். அழுவதா? சிரிப்பதா? என்ற நிலைக்கு ஆளானார்! அழுதால் புண்ணியகோடி இறந்து விடுவார்