பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறுகதைகள்

435


என்று கருதி மற்றவர்களும் அழுவர்! சிரித்தால் எள்ளல், பரிகசித்தல் என்று மற்றவர் வெகுளுவர்! புண்ணிய கோடியுடன் பேசினார், நாட்டு மருத்துவர். "பசிக்கிறது!” என்றார் புண்ணியகோடி! மனைவியை அழைத்து இரண்டு இட்லி அவித்துக் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார். புண்ணியகோடியின் வாசகத்தை மருத்துவர் பிடித்துக் கொண்டார்.

"ஐயா, இட்லி அவித்தல் என்றால் என்ன?” என்றார் மருத்துவர்.

"மாவை இட்லியாக, பக்குவமாக அவித்தல்” என்றார் புண்ணியகோடி.

பேச்சு தொடர்ந்தது!

“தொட்டுக்க என்ன செய்யலாம்?”

“இரண்டு கிழங்கு...... அவிக்கலாம்!"

"அப்படியானால் என்ன? அவித்தல் என்றால் சமைத்தல் பக்குவப்படுத்தல், உண்ணத்தக்கதாகச் செய்தல் என்பது பொருள் :”

“அப்படியானால்” பொறி வாயில் ஐந்தவித்தல் என்றால்?”

"அதுவும் அப்படித்தான் ஐயா! நமது பொறிகளாகிய ஐம்பொறிகள், மெய், வாய், கண், மூக்கு, செவி முதலியன தன்னலத்தின் காரணமாகப் பக்குவம் இல்லாமல் இருக்கின்றன! பண்பட்ட பயிற்சி இன்மையின் காரணமாகத் தீமை செய்கின்றன. சுய நலத்தின் காரணமாகச் சமூகத் தன்மையை இழந்துள்ளன. இவற்றை நாம் மற்றவர்களுடன் கூடிப் பழகுதலுக்குத் தக்கவாறு பக்குவப்படுத்த வேண்டும். முரட்டுத் தனத்தை அடக்க வேண்டும். மற்றவர்கள் நம்முடன் கூடி வாழத்தக்க நிலையில் நம்முடைய பொறிகள் பக்குவத் தன்மை உடையனவாக, ஈர்த்து அணைக்கும் இயல்பினதாக