பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

436

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விளங்க வேண்டும். அப்படிப் பக்குவப் படுத்திக் கொண்டு வாழ்வோர் ஒழுக்கமுடையோர். இறை நெறி நிற்போர். இவர்கள் பல்லாண்டு வாழ்வர்!" என்று விளக்கினார் மருத்துவர்.

"ஐயா, மருத்துவர் அவர்களே! என் அறிவுக் கண்ணைத் திறந்தீர்கள்” என்றார் புண்ணியகோடி.

“நன்றாக வாழுங்கள்! துய்ப்பன துய்த்து மகிழ்ந்து வாழுங்கள்! இன்புறுத்துங்கள்! இன்புறுங்கள்! வையம் உண்ண உண்ணுக! வையம் உடுத்த உடுத்துக! வையம் மகிழ்ந்து வாழ வாழுங்கள்! இதுவே திருக்குறள் வழி!


12

சாத்தன் நல்ல புத்திசாலி. உழைப்பாளியும் கூட எல்லோருடனும் பழகுவார்; எளிதில் நட்பு பிடிப்பார்; பணப் புழக்கம் நன்றாகச் செய்வார்; கூட்டு வியாபாரங்களையும் எளிதில் தொடங்குவார்; எடுத்தவுடன் எல்லோரையும் நம்பி விடுவார். ஆயினும் முன் கோபம் உடையவர். ஐயப்பட்டால் தெளிவிப்பது கடினம்; மூர்க்கத்தனமான பிடிவாதகுணம் உடையவர்; சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பார். மற்றவர்கள் சொல்வது அவருடைய காதில் ஏறாது. கேட்டுக் கொள்ளவும் மாட்டார்; பல நாள் பழக்கத்தைக் கூட ஒரு அற்பமான செய்தியில் முறித்து விடுவார். மிகத் தீவிரமான குணங்களுடைய பாத்திரம் சாத்தன்.

இவருக்கு வாய்த்த ஒரு நண்பர் இராமன். இரண்டு பேரும் மிகவும் நெருங்கிப் பழகினார்கள். எங்கும் இருவரு மாகவே சென்றனர். இராமன், சாத்தனைப் புகழ்ந்து எல்லாம் பேசினான்! விழாக்கள் எடுத்தான்! சாத்தன் மிகவும் மயங்கி விட்டார்! தனது நிறுவனத்திலேயே மேலாளர் பதவியும் இராமனுக்குக் கொடுத்தார்! நிர்வாகம் கைக்கு வந்தவுடன்