பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராமனின் குணம் மாறியது. சாத்தனைக் கலக்காமலே காரியங்களைச் செய்தான்! சாத்தன் ஆத்திரப்பட்டார்! பரபரப்பாகச் சிந்தித்தானே தவிர, ஆய்வு செய்தானில்லை! வரலாற்றுப் போக்கினை எண்ணினானில்லை! எரிச்சலுக்கு ஆளானார்! ஆத்திரம் அறிவை மறைத்தது. விவேகத்தை விலைக்குக் கொடுத்துவிட்டான்! அதனால் திடீரென்று இராமனை, மேலாளர் பதவியிலிருந்து நீக்கி விட்டார். இராமன் அடிபட்ட பாம்பானான்! படமெடுத்து ஆடினான்! இரண்டு பேரிடமும் நீங்காத வன்மம் வளர்ந்தது! சாத்தனை இராமன் மிகவும் கேவலமாகப் பேசினான்! ஏசினான்! அவதூறு செய்தான்! சாத்தனை அழிப்பதே இராமனின் குறிக்கோளாயிற்று! இராமன், சாத்தனின் நிறுவனத்தை மூடக் கூடிய அளவுக்குத் தீவிரமானான்!

இந்த நிலையில் இவர்களிடையே கடும் பகை வளர்ந்தது! நிறுவனத்தில் பணி நடை பெறவில்லை. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு நல்லது தானே! வன்மத்தின் உச்ச நிலையில் சாத்தன் நிற்கிறார். இந்த நிலையில் அருளடிகள் இவர்கள் விவகாரத்தில் தலையிட்டார். "பகைமையை மறந்திடுக! பழைமையைப் பாராட்டுக!” என்றருளிச் செய்தார். சாத்தன் சிந்தித்தார்! அருளடிகளின் உரை, உரையாக மட்டுமல்ல! அனுபவமுடைய ஆசிரியனாக வேலை செய்தது! இருவரும் நட்பு கொண்டார்கள்.


வன்மம் வாழ்வைக் கெடுக்கும்.
வன்மம் விடுக! வாழ்வில் இணைந்திடுக!
இன்பம் சூழும்! எல்லாரும் வாழ்ந்திடலாம்:

13


ஞ்சையைச் சேர்ந்த கருணானந்தம் நல்ல புத்திசாலி, உழைப்பாளி: காரியசாதனை உடையுவர். அவர் அங்கத்தினராக உள்ள எந்த அமைப்பிலும் தாமே அந்த