பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

438

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அமைப்பாக ஆகிவிடும்படி நடந்து கொள்வார். மற்றவர்களும் வேறு வழியின்றி ஒத்துழைப்பர். எனவே அவர் வளர்ந்தார்; வளம்பல சேர்த்தார்! இவருக்கு மிகவும் வேண்டியவராக இருந்த திருச்சிராப்பள்ளி இராமு உள்ளுரப் பொருமிக் கொண்டிருந்தார், தனக்கு ஒன்றும் கிடைக்க வில்லையே என்று! தனிக் கடையும் வைத்துவிட்டார்.

முதலில் கருணானந்தம் போல் அல்லாமல் நல்லவராகவும் இருந்தார். கருணானந்தம் இராமு கடையை மூடும்படி செய்வதற்காகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். பெரிய சேட் ஒருவருடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு போட்டியாக இராமு கடைக்கு எதிராகக் கடை திறந்து பார்த்தார். கருணானந்தத்துக்குத் துணையாக வந்த சேட்டுக்கோ கருணானந்தத்தின்மீது பிரியமில்லை. இவர் திறமைசாலி, நம்மையே விழுங்கி ஏப்புமிட்டு விடுவார் என்று பயந்து இராமு பரவாயில்லை என்று கருதி இராமுவுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டார். கருணானந்தம் பாடு திண்டாட்டமாயிற்று! ஆத்திரம் பொங்கியது! திட்டினார்! கள்ள வாணிகம், கையூட்டு, கருப்புப்பணம், வரி ஏய்ப்பு சேட்டுக்கு அடிமை என்றெல்லாம் வசைமாரி பொழிந்தார்! இராமு, புத்திசாலி! அவர் தம்மீது உள்ள குற்றங்கள் எல்லாம் கருணானந்தத்திடம் கற்றுக்கொண்டவையே என்றார்! மக்கள் இராமுவிடம் அனுதாபம் காட்டினர்! இராமு வெற்றி பெற்றார்.

இருவருக்கும் தொடர்புள்ள இழிவுகள்

என்றென்றும் நீங்கா!

14

முத்துசாமிக்கு கடவுள் பக்தி அதிகம். எப்பொழுதும் கடவுளைக் கண்ணால் பார்க்க வேண்டும் என்ற ஆசை நாள்தோறும் திருக்கோயில்களுக்குச் சென்றான். நாட்டில்