பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உள்ள திருக்கோயில்களுக்கெல்லாம் சென்று வழிபட்டான். முத்துசாமி முழுகாத தீர்த்தம் இல்லை; கும்பிடாத கோயில் இல்லை! கடைசியாக ஒருநாள் முத்துசாமியின் கனவிலும் கடவுள் வந்துவிட்டார்! ஆம், சாட்சாத் கடவுளேதான்! முத்துசாமிக்குத் தாங்கமுடியவில்லை! கொள்ளை மகிழ்ச்சி! விழுந்து விழுந்து வணங்கினான் !

கடவுள், "எதற்காக அழைத்தாய்?" என்று கேட்டார்! முத்துசாமி, "ஐயா, இறைவனே! நான் உன்னை எப்படி நினைக்க?" என்று கேட்டான், இறைவனுக்குச் சிரிப்பு தாங்கமுடியவில்லை! "என்னை நினைக்கவா? ஏன் பா, முத்துசாமி! நீ நினைக்கப் போறியா? உன்னாலே முடியுமா? நீ கும்பிடுவ! பேசுவ! உனக்கு நினைச்சே பழக்கமில்லையே!” : என்றார் கடவுள்.

"இறைவா, என்னுடைய பொறிகள் மட்டுமே வேலை செய்கின்றன. அகக் கருவிகள் - அறிவுக் கருவிகள் செயற்பட்டதே இல்லை! இறைவா, என்னை மன்னித்துக்கொள்! உன் திருக்கோயில் வருவதும் ஒரு முயற்சி! உன் சந்நிதியில் நின்று தெண்டனிடுவதும் ஒரு முயற்சி! உன் திருநாமத்தை ஓயாது கூறுவதும் ஒரு முயற்சிதான்! இவையெல்லாம் பொத்தல் விழுந்த சுரைக் குடுக்கை போல, உள்ளீடு இல்லை! இறைவா, நான் உன்னையடையச் செய்யவேண்டும். இறைவா!” என்றான்.

கடவுள், "சிந்தனை செய்க! எண்ணத்தில் எண்ணுக! மனத்தில் நினைந்திடுக! இதுவே, என்னை அடையும் வழி!" என்றார். முத்துசாமி, "இறைவா, நான் உன்னை எந்த உருவ்த்தில் எந்தத் திருநாமத்தில் எண்ணுவேன்? சிந்திப்பேன்! நினைப்பேன்!” என்று கேட்டான்!

இறைவன் "நீ என்னைப் பற்றிச் சிந்தனை செப் போதும்!" என்றார். "உருவம் வேண்டுமா? உன்னால் எந்த