பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

440

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உருவத்தை எளிதில் நினைக்க முடியுமோ, அந்த உருவத்தை நினை!” என்று மேலும் கூறினார். "அப்படியானால் எப்படியும் எந்த உருவத்திலுமா?"
"ஆம்! ஆம்! அதுவே. சரியானது...!"
"அப்படியா? நீ என்னை ஒரு நாயாக, கொட்டிக் கிடக்கும் குப்பையாக, கழித்த மலமாக வேண்டுமானாலும் எண்ணி நினைத்துக் கொள்! அதுபற்றிக் கவலையில்லை! நீ, நினைக்க வேண்டும்! அவ்வளவுதான்!

...ஏனப்பா, முத்துசாமி! உனக்கு ஏன் இவ்வளவு தொல்லை! நீ, நினைக்க வேண்டும்! எண்ண வேண்டும்! சிந்தனை செய்ய வேண்டும்! மிகக் கடுமையான பயிற்சிகள்! அதற்குப் பதிலாக ஒரு ஆலோசனை! நீ என்னை நோக்கி வர வேண்டாம்! நான் உன்னை நோக்கி வருகின்றேன்!” என்றார் கடவுள்!

முத்துசாமிக்கு ஒரே மகிழ்ச்சி! "அப்படியா, இறைவா! அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்றான்.

"வேறு ஒன்றும் செய்ய வேண்டாம்! உன் பக்கத்து வீட்டினை நேசி! அன்பு காட்டு! அதுவே போதும்! அந்த அன்பில் நான் இருக்கின்றேன்!” என்றார் கடவுள்,

"அப்படியா, இறைவா! நான் இனி அயல் வீட்டாரிடம் அன்பு காட்டுவேன்! உதவி செய்வேன்!” என்று கும்பிட்டு வீழ்ந்தான்!

கடவுளைத் தேடிச் சென்று அடைய பக்தி!
கடவுள் நம்மைத் தேடிவந்து அடைய தொண்டு!


15

கோவிந்தன் நல்ல விவசாயி. அவன் வாழும் ஊர் வானம் பார்த்த பூமி மழை பெய்தால்தான் விளையும்