பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இங்குச் சில ஆண்டுகளுக்கு ஒரு தடவைதான் மழை பொழியும்.! பல சமயங்களில் மழை பொழிவது பல ஆண்டு களுக்கு ஒரு தட்வை ஆனது. அதனால், கோவிந்தன் வேளாண்மைத் தொழிலை மெள்ள மெள்ள மறந்து வந்து கொண்டிருந்தான். மாறாக, வியாபாரத்துக்குச் சென்று விட்டான். பணம் கிடைத்தது!

மீண்டும் கோவிந்தனையும் அவனுடைய ஊர் மக்களையும் துன்பம் விட்டபாடில்லை. அதாவது நாடு தழுவிய நிலையில் வறட்சி வந்தது. வேளாண்மை பாதித்தது. உணவுப் பொருள்கள் கிடைக்கவில்லை. பஞ்சம் வந்தது. இராம தேவதை கோயிலில் ஏராளமான கூட்டம்! சாமியாடி மீது சாமி வரவழைக்கப் பெற்றது, நாட்டின் துன்பம் நீக்கும் வழி கேட்க! சாமிக்குப் பூசை நடக்க வேண்டுமே! சாமியும் வந்தது! இந்தச் சாமி, நல்லசாமி! அழகாகவே சொல்லியது. கோவிந்தனையும் மற்றும் கிராமத்து நாட்டாண்மைக்காரர் களையும் அதட்டுப் போட்டு அழைத்தது!

"ஏன்பா! நான் நிரந்தரமாக் குடியிருக்கும் மரங்களை யெல்லாம் வெட்டி அழிச்சுட்டீங்களே! அதனாலே நான் பச்சை கண்ட இடம் நோக்கி ஓடிட்டேன்! அதனாலேதான் மழையில்லை!” என்றது சாமி!

'என்ன சொல்றே! அம்மா, தாயே! தெரியாம செஞ்சுட்டோம்! இனி நெறைய மரம் வைச்சு வளர்க்கிறோம் அம்மா! மரத்தையும் வெட்ட மாட்டோம்!” என்றனர் கிராம வாசிகள்.

"ஏனப்பா! மழையும் பெய்யுது! பெய்த தண்ணிரைத் தேக்கி வைச்சுக்க வாய்க்கால் இல்லை! வரப்பு இல்லே! ஏரியைக் கூட வரப்புக்கட்டி நிலமாக்கிட்டீங்களே!”

"ஆமா தாயே! அம்மா புள்ளெ குட்டிகள் பெருகிடிச்சு! நிலம் பத்தலை! உழுது சேர்த்தோம்! அச்சு கட்டினோம்!.