பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

444

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



17


ரங்கசாமியும் அபிராமியும் கணவனும் மனைவியுமாக வாழத் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆயிற்று. அரங்கசாமியின் குடும்பம் ஒரு நடுத்தரக் குடும்பம், நன்செய்கள் உண்டு; புன்செய்கள் உண்டு; ஆடுமாடுகள் உண்டு. சரியாக நிர்வாகம் செய்தால் குடும்பத்திற்குப் போதுமான வருவாய் வரும். சிறப்பாக வாழலாம்.

ஆனால், குடும்பம் அப்படி இல்லை! ஏன், கணவன் - மனைவியிடையே ஒற்றுமை இல்லை; ஒத்துழைப்பு இல்லை. அதனால் வருவாய்க்குத் தகுந்த உழைப்பைச் செலுத்த முடியவில்லை. பாதிநாள் சண்டையில் கழிவதால் மன அமைதியில்லாமல் அரங்கசாமியும் வாழ்க்கையில் வெறுப்படைந்து போனான். அபிராமியும் மோசமான பெண் அல்ல. உழைக்க விரும்பாதவளும் அல்ல. ஆனால், அவர்களுக்கிடையில் போட்டி! காலப்போக்கில் போட்டி! அழுக்காறு பேயாகிறது! ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புக்குப் பதிலாகக் கெடுதல் செய்து கொள்ளும் எண்ணம் வளர்ந்தது. மனமொத்து வாழ வேண்டியவர்கள் திரிந்த மனமுடையவராயினர்; உட்பகை வளர்ந்தது: உடன் பாடே இல்லை. ஒப்புரவறிதலே இல்லை; ஒத்துழைப்பு என்பதும் இல்லை.

இந்தச் சூழ்நிலையில் குடும்பம் சீர்கேடுற்றது. வறுமை மிஞ்சியது; குடியிருப்புமனை பாழ்மனையாகியது. தொட்டது துலங்குவது இல்லை. இந்தச் சூழ்நிலை அபிராமியை மிகவும் கடுமையாகப் பாதித்தது. இந்நிலையில் அரங்கசாமி வீட்டுக்கு ஒரு விருந்தினர் வருகிறார். பசிக்கு உணவு கேட்கிறார். அரங்க சாமியும் அபிராமியும் நற்குடிப் பிறந்தவர்கள். ஆதலால் கலக்க முறுகின்றனர். சூழ்நிலையை உய்த்துணர்ந்து கொண்ட விருந்தினர்.