பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

என்ற திருக்குறளை வாய்விட்டுக் கூறுகிறார்.

"ஐயன்மீர்! நீவிர் மனையறம் நிகழ்த்துபவர்கள். உங்கள்
வாழ்க்கைதான் உங்கள் வாழ்க்கையை வளமாக்குவது,
உங்கள் மனைவளம்தான் நாட்டின் வளம்! ஆதலால்
ஒத்ததறிந்து வாழுங்கள்! நமது வாயின் மேல்வரிசை,
கீழ் வரிசைப் பற்களைப் போல ஒன்றுபட்டு உழைத்து
வாழுங்கள்! இதுவே வாழும் வழி”


என்று கூறினார்.

"ஒத்த தறிந்து உழைத்து வாழ்தலே வாழ்வு"

18


றுமுகம் ஒரு சிறு விவசாயி. ஒரிணைமாடு வைத்து உழுது வந்தான்! பெரிய குடும்பம்; வருவாய் போதவில்லை, எனவே, அரை வயிற்றுக் குடும்பமாகக் காலந்தள்ளப் பெற்றது. மனிதர்களுக்கோ அரைவயிறு. ஆனால், அவனுடைய மாட்டின் கதி பற்றிக் கூறவா வேண்டும்?

தைத் திங்கள் வந்தது! பொங்கல் திருநாளும் வந்தது! சர்க்கரைப் பொங்கல் செய்தனர். குடும்பம் முழுதும் ஆசைதிர சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டார்கள். உண்ட களைப்பில் உறங்கிவிட்டார்கள். கழனியில் உழுதும் களத்து மேட்டில் கதிரடித்தும் கொடுத்து உதவி செய்த மாட்டுக்கு வைக்கோல் போட மறந்து விட்டார்கள்.

உழுத ஓரிணை மாட்டுக்குப் பசி. ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டன. ஒருமாடு துணிச்சலுடன் கத்துவதற்கு இணைமாட்டை அழைத்தது. கத்தினால் தீனி கிடைக்கும் என்ற நம்பிக்கை, இந்த மாட்டுக்கு! மற்ற மாடோ, கத்த