பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

446

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மறுத்தது. கத்தி தீவனம் பெறுதலை "இரத்தல்” என்று கருதியது: இழிவாக எண்ணியது. அழைத்த மாடோ நியாயம் எடுத்துக் கூறியது.

"நமது தலைவன் வைக்கோல் போடாததற்குக் குடும்ப நிலையில் சோர்வே காரணம். அவர்களிடம் நாம் கேட்பதோ வைக்கோல். அது மனிதர்களுக்குப் பயன்படாது. அப்படியும் நாம் வைக்கோல் கேட்டுத் தின்று உயிர்வாழ ஆசைப்படுவது தீனி தின்னும் ஆசையால் அல்ல. அல்லது உயிர் வாழும் ஆசையாலும் அல்ல. இப்போது நாம் தீனியின்றிப் பட்டினி கிடந்து செத்துப் போனால் அடுத்த ஆடிப்பருவத்தில் உழுவதற்கு மாடு இல்லாமல் சங்கடப்படுவான். ஆதலால், அவன் நன்மைக்காக நாம் வாழ்கின்றோம்; ஆசைப்படுகின்றோம்" என்றது.

மற்ற எருதுக்கும் உடன் பாடாயிற்று! இரண்டும் கத்தின! வைக்கோல் கிடைத்துத் தம்மை உடையானை வாழ்வித்தன! வாழ்கின்றன!

உழைப்பதூஉம் வாழ்வது உம்
உலக நன்மைக்காக இருத்தல் வேண்டும்.