பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறுகதைகள்

447



6. மனைவியின் கடமை

செல்வி சுந்தரி, நல்ல பெண். நன்றாகப் படித்து வளர்ந்து வந்தாள். செல்வி சுந்தரிக்குத் திருக்குறள் படிப்பதில் ஆர்வம் உண்டு. திருக்குறள்ை நன்றாகக் கற்றாள். திருக்குறள் இல்லற நெறியைப் போற்றுவதை உணர்ந்த சுந்தரி, விரைவில் திருமணம் செய்துகொண்டு இல்லறத்தைத் தொடங்க விரும்பினாள். முயற்சி செய்தாள். காதலித்துக் கடிமணம் செய்துகொள்ளத் தக்கோனாக சிங்காரவேலன் கிடைத்தான்.

சிங்காரவேலன் நல்ல பையன்; படித்தவன். திருமணத்திற்கு இசைந்தான். உற்றார், ஊரவர் முன்னிலையில் இரு வருக்கும் திருமணம் நடந்தது. நாட்கள் சில ஓடின. கணவன் சிங்காரவேலன் குடும்பப் பாங்கினை ஏற்றுப் பொறுப்புடன் நடந்து கொள்பவனாகச் சுந்தரிக்குத் தென்படவில்லை. பல தடவை எடுத்துக் கூறியும் பயனில்லை. குடும்பம் நிதி நெருக்கடிக்கு ஆளாகியது. கணவன் வேளா வேளைக்குச் சாப்பாட்டுக்கு வந்து விடுவான். ஊரில் உள்ளோர் மூன்று வேளை உண்டால் இவன் எட்டு வேளை சாப்பிடுவான். ஆனால், யாதொரு வேலையும் பார்ப்பதில்லை. நடைமுறையில் சுந்தரிக்குக் குடும்பப் பாரம் அழுத்தியது. கணவன் நிலையைக் கண்டு இரங்கினாள்; வருத்தப்பட்டாள்.

அண்டை அயலார் வீடுகளில் கடன் வாங்கியாயிற்று. கடன் தொல்லை. சுந்தரிக்குத் திருக்குறள் மீதே வெறுப்பு வந்துவிட்டது. 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை" என்ற திருக்குறளை நம்ப மறுத்தாள். ஏன்? திருக்குறளையே நம்ப மறுத்தாள். இல் வாழ்க்கை அறமாக இல்லையே என்று கவலைப்பட்டாள்! அண்டை அயல் வீட்டார் சும்மா இருப்பார்களா? சுந்தரியை நலம் விசாரிப்பார்கள்! கணவனின் பணி, ஊதியம் பற்றி விசாரிப்பார்கள்! எல்லாரிடத்திலும்