பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறுகதைகள்

451


 தருகிறேன். உன் காலடியில் செல்வத்தை வைத்துக்கொண்டு ஏன் வறியவன் என்று அழுகிறாய்? அசந்துபோய் உட்கார்ந்திருக்கிறாய்? எழு! பூமியோடு (என்னோடு) உழைப்பு வேள்வி செய்!” என்ற உரை கேட்டது.

கோவிந்தசாமிக்குப் பூமி தேவியின் உரை விழிப்பைத் தந்தது. விழிப்புணர்வுடன் எழுந்தான். நிலத்தைச் சீர்திருத்தினான்; கொத்தினான்; வாழை பயிரிட்டான்; ஊடு பயிராகக் கீரை விதைத்தான். சில நாள்களில் கீரை விற்றுமுதல் வரவு. பின் வாழை மூலம் பல ஆயிரம் வரவு! இன்று கோவிந்தசாமி வளமுடம் வாழ்கிறான்!

"இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலம்என்னும் நல்லாள் நகும்." (குறள் - 1040)