பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

452

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



9, மங்களகரமான பொங்கல்


, மச்சான்! வழக்கம் போலப் பொங்கல் வந்திடுச்சு!”

"ஆமாம்! என்ன பண்ணச் சொல்றே!"

“பொம்புளப் பிள்ளைகளுக்குச் சீர் அனுப்பனும் ! கையிலோ காசில்லே! மழை குறைவினால் கழனியிலோ விளைவில்லை! என்ன செய்வது மச்சான் ?”

"என்ன செய்வது! தலைவிதியை நொந்துகொண்டு அழ வேண்டியதுதான்! கடவுள் நம்ம பக்கம் கடைக்கண் கூடக் காட்டமாட்டேங்கிறாரே! என்ன செய்வது?"

"என்ன மச்சான்! கடவுள் மேலே பழி போடறீங்க! அதெல்லாம் சுத்தத் தப்பு! அவர் நல்லாத்தான் செய்யிறாரு பாழாப்போன மனுஷங்க தான் எல்லாத்தையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிடுறாங்க! ஏன், வெளியே போவானேன் சாட்சிக்கு? உங்க மூத்த பிள்ளையைப் பாருங்களேன்! ஒரு வேலைக்கும் போக மாட்டேங்கிறான். குடிச்சிட்டுத் திரியிறான். சிகரெட்டும் கையுமாகவே சுற்றுகிறான்!

"அவனை என்ன அடிச்சுத் திருத்தமுடியுமா? பெத்த பிள்ளையானாலும் தோளை மிஞ்சியவன் தோழன் அல்லவா? என்ன பண்ணச் சொல்றே? எல்லாம் நீ கொடுத்த செல்லம்! நேற்று நம்ம முதலாளிகிட்டே போய் . கடன் வாங்கியாந்து வச்சிருந்தேன். அதை எடுத்துக்கிட்டுப் போயிட்டான்!”

"நம்ம புள்ள தானுங்க எடுத்தது. போயிட்டுப் போவுது இப்ப வேறு ஏதாவது வழி சொல்லுங்க!”

"என்ன யோசிக்கிறது! மயிலைக் கிடேரியை வித்துட வேண்டியதுதான்! வேறு என்ன வழி?”