பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"ஐயோ! மயிலைக் கிடேரியை விற்பதாவது: ஊஹஅம்! அது நல்ல கன்னுக்குட்டிங்க! அது பொறந்த பிறகு நம்ம வீட்டுலே ஒரு சாவு கூட வரலிங்க! மயிலைக் கிடேரியை விக்கக் கூடாதுங்க!” அது இன்றோ நாளையோ கன்று போடப் போகிறது! அது கன்று போட்டபிறகு நம்ம கலி தீரும்! பால் விற்று சீவனம் செய்யலாம். அது மட்டுமல்ல, உங்க மூத்த பிள்ளைக்கு மயிலைக் கிடேரிமேலே உசுருங்க! அதை வித்துட்டா அவன் வாழமாட்டான்!"

"பின் என்னதான் பண்ணச் சொல்றே! வேறு வழியே தெரியவில்லை; மயிலைக் கிடேரியை விற்பதைத் தவிர! 'கெட்ட குடியே கெடும்! கெடட்டும்! டேய் கருப்பய்யா !”

“என்ன அப்பா? *

"ஆள் மாத்திரம் வளர்ந்துட்டே! அரைக்காசுக்கு வழியில்லே! மேற்கொண்டு வீட்டுக் காசை எடுத்துச் செலவழிக் கிறாய்! என்ன. போ! உன் தலைவிதி எப்படியோ ஆகட்டும்! இந்த மயிலைக் கிடேரியைச் சந்தைக்குக் கொண்டுபோய் வித்துட்டு வா!

"அப்பா! அப்பா! நம்ம மயிலைக் கிடேரியையா விற்கச் சொல்கிறீர்கள்? எப்படியப்பா மனம் வந்தது?

"என்னடா மனம் வேண்டியிருக்கு! உனக்கு ரொம்ப மனமிருக்காக்கும்! மனமிருந்தா கால் காசுக்கு வழியில்லாம ஊர் சுற்றுவாயா? போடா, போ! பொங்கல் வருகிறது! கையில் காசு இல்லை! அக்கா, தங்கச்சிக்கெல்லாம் சீர்ப்பணம் கொடுக்கணும்! கொண்டுபோய் விற்றுவிட்டுக் காசைக் கொண்டுவா! புகைச்சுக் கரியாக்கி விடாதே! குடித்துச் செலவழித்துவிடாதே! சீர் வரிசை செய்யலேன்னா ஊர்ல நாலு பேசுவாங்க!”

"அப்பா! அப்பா! நம்ம மயிலைக் கிடேரியை விற்க வேண்டாம் ! நான் காசு கொண்டாறேன் பொங்கல் செலவுக்கு!”