பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

454

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"எங்கிருந்து கொண்டு வரப்போகிறாய்!"

"என்னை நம்புங்கள்! எவ்வளவு வேண்டும்! எவ்வளவு வேண்டும்?" - - -

"ஐந்நூறு ரூபாய்!”

பையன் போனான். பஞ்சாட்சர முதலியாரிடம் போய் அவரை வீழ்ந்து வணங்கினான்.

"என்ன ராமு! கும்பிடு இருக்கு !"

"ஐயா, அதெல்லாம் இல்லீங்க!"

'பின் என்ன?”

"எனக்கு ஒரு வேலை வேணும்”

"உனக்கா? ஒரு வேலையா? நீ உடம்பு வளைத்து வேலை பார்ப்பியா?"

"ஐயா, மன்னிச்சுக்குங்கய்யா! இன்றிலிருந்து நான் புது ராமன்! என்னைப் பெத்த அம்மா கண்ணிர் கலங்கி நிக்குது. அது என் மனத்தைக் கரைத்துவிட்டது! ஐயா உண்மையைச் சொல்றேன்! நான் செல்லமா வளர்த்த மயிலைக் கிடேரியை விற்கச் சொல்கிறார்கள். ஊஹூம் அதை விற்கக்கூடாது? அது என் உசுரு”

அப்ப பணக் கஷ்டத்துக்காக வேலை கேட்கிறியா?"

"இல்லை எசமான்! இனிமே உழைத்தே பிழைக்கணும்னு முடிவுக்கு வந்துட்டேன். அப்பனுக்கும் வயசாயிடுத்து. அத்தை மவ வேறு கழுத்தைக் காலியா வைச்சுக்கிட்டு நெருக்கறா! ஐயா ஒரு வேல கொடுங்க! என் ஆயுசு உள்ள வரையில் உண்மையா உழைக்கிறேன்!

"அது சரி ராமு, உனக்கு வேலை கொடுப்பதில் என்ன யோசனை? மூன்று தலைமுறையா என் குடும்பத்துக்கு வேண்டிய குடும்பம்! இடையிலே இப்படிப்