பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

35


5. தேவகோட்டை குறள்விழாக்
கவியரங்கம்
தேவகோட்டை திருக்குறட் கழகம்
9-8-69இல் நிகழ்த்திய
குறள் விழாக் கவியரங்கத் தலைமைக் கவிதை

        கோட்டை பலநாம் கொண்டிலோம் எனினும்
        தெளிவுறத் தமிழைத் தெரிந்திட தேவ
        கோட்டையை நமது கோட்டையாய்க் கொண்டோம்
        இந்தக் கோட்டையில் எந்த மேடை
        ஆயினும் அந்த மேடையில்ந மக்கும்
        ஓரிட முண்டு! இவ்வா றுறவினைப்
        பெருக்கி எம்மை வளர்த்திடும் பெருமையோர்,
        குறட்கழ கத்தினர்! கொள்களம் நன்றி!.
        பட்டி மன்றமே கேட்டுச் சளைத்துப்
        புளித்துப் போன துன்பம் ஒர்புறம்
        தொடர்ந்து பிடிக்கும் வேட்கை ஒர்புறம்
        இவற்றிடை எண்ணி எண்ணிப் போராடி
        தேர்ந்தொரு வழியைத் தெரிந்தனர்! இவரைக்
        கவிஞ ராக்கிக் காணுவோம் என்றே
        கவியரங் கேற்றக் கருதினர் போலும்!
        கவிதை உலகம் நமக்குப் புதியது
        தேர்ந்து கவிசொலும் தேசிக னல்லன்
        ஆனந் தத்தமிழ் அழகுறப் பாடும்
        அமிர்த விங்கனும் அல்லன்; இன்பக்
        கவிபொழி கண்ண தாசனு மல்லன்
        லடிதமிழ்க் கவிமுடி யரசனு மல்லன்
        பழகு தமிழ்க்கவி நாமே! யாரும்
        எமைநோ காதீர், ஏற்றிவைத் தவரை