பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


        நோமின்! யாமிவண் துவலும் கருத்துச்
        சுவையது மாறினும் அவையிர் நுமது
        கனிந்தபே ரன்பு மாறா தென்பதே
        உண்மை! நமதுளம் கனிந்தவாழ்த் துக்கள்!

        உலகெலாம் போற்றும் உயர்புகழ் வள்ளுவர்
        உளங்கள் அனைத்தும் ஒருங்கே இணைய
        இசைந்த நெறியினை இன்பத் தமிழில்
        குவலயம் தனக்குக் குறள்நூ லாக்கினர்
        பெருமை பெற்றனர்; பெரும்புகழ் சேர்த்தனர்
        வண்மைத் தமிழில் வள்ளுவர் தருகுறள்
        வாழும் மாந்தர்க்கு இனிய மருந்தாம்.
        சிதறிக் கிடக்கும் சிந்தை யனைத்தையும்
        ஒருங்கு சேர்த்தினி தொன்றிட உளத்தில்
        ஒருமைப் பாட்டிற் குரியவித் திட்டே
        இனிய உலகையும் இன்ப உலகையும்
        காட்டும் திருக்குறள் வாழிய வாழிய!
        நாடறி புலவர் நந்தமிழ் வள்ளுவர்
        நாடெலாம் பார்த்து நாடியும் பார்த்துக்
        குறைகள் நீங்க நிறைகள் ஒங்க
        வழியும் காட்டி வாழ்கஎன் றாரே!
        நிலத்தினைத் திருத்தி விளைத்திடும் தொழிலை
        வேளாண் மையென விளம்பிட லாகும். .
        உயிர்த்திறன் தெரிந்து உயர்நலம் நல்கி
        நாடொறும் வளர்ப்பதே வள்ளுவம் ஆகும்
        வள்ளுவம் வானினைப் பாடுவ தன்று
        மண்ணினைச் செழிக்கப் பாடுவ தாகும்
        வள்ளுவம் கடவுளைப் பாடுவதன்று
        மானுடம் வளம்பெறப் பாடுவதாகும்.
        வள்ளுவம் கோட்டைக் குரியகோ மகனைப்