பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

470

பிரிக்கப்பட்டுப் பதினைந்தாம் தொகுதியில் அமைக்கப் பெற் றுள்ளன என்பது வாசகர்கள் அறிந்து கொள்ளவேண்டிய செய்தி.

இத்தொகுதிகளில் உள்ள கட்டுரைகள், கவிதைகள் ஏற்கெனவே வெளிவந்த புத்தகங்களில் பதிப்பிக்கப்பெற்றவை மட்டுமல்ல, கையெழுத்துப் படிகளாகவும் தட்டச்சுப் படிகளாகவும் இதழ்களில் வெளிவந்து புத்தக உருவம் பெறாதவைகளாகவும் இருந்த அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், கட்டுரைகள் தொடர் கட்டுரைகள், கவிதைகள், சிறு கதைகள் என ஏறத்தாழ 2500 பக்கங்கள் சேகரித்துப் புதிதாகச் சேர்க்கப்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இங்ங்னம் தொகுக்கப் பெற்ற இத் தொகுதிகள் அனைத்தும் அடிகள்பிரான் எழுத்துக்கள் முழுவதும் அடங்கினவை அல்ல. இதழ்களுக்கு எழுதிய கட்டுரைகள், நூல்களுக்கு எழுதிய வாழ்த்துரைகள், அணிந்துரைகள், மலர்களுக்கு எழுதிய வாழ்த்துச் செய்திகள், அறிஞர்களுக்கு எழுதிய கொள்கைக் கடிதங்கள். ‘தமிழகம்’, ‘மக்கள் சிந்தனை' இதழ்களில் எழுதிவந்த திருமுகம், தலையங்கம், இதழ்கள் பலவற்றுக்கு அளித்த பேட்டிகள், வினா விடைகள், டொன்மொழிகள், அமுத மொழிகள் எனப் பலவும் தொகுக்கப் பெறத் தக்கவையாக எஞ்சி உள்ளன. இவையெல்லாம் அடங்கிய முழுமையான தொகுதிகள் விரைவில் வெளிவர இறைவன் அருள்புரிவானாக.

இத்தொகுப்புப் பணியில் எங்களுக்கு ஆர்வமூட்டி வழிகாட்டிய தவத்திரு பொன்னம்பல அடிகள்பிரானுக்கு நன்றி தெரிவித்து வணங்கி மகிழ்கின்றோம்.

அடுத்து. இந்த அரிய பணியில் எங்களை வழிநடத்திய மணிவாசகர் பதிப்பக நிறுவனர் தமிழவேள் டாக்டர் ச.மெய்யப்பனார்க்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். பதிப்புக் குழுவுக்கு அவ்வப்போது உடனிருந்து உதவிய ஆதீன அலுவலகத்தைச் சார்ந்த புலவர் சு. வீரமுத்து, செல்வி ம.கஸ்தூரி இருவருக்கும் நன்றி.

எல்லாவற்றிற்கும் மேலாக தோன்றாத் துணையாய் நின்று இயக்குவித்த அருள்நெறித் தந்தையின் குருவருளையும் இறைவன் திருவருளையும் பதிப்பாசிரியர் குழு நினைந்து போற்றி வணங்குகிறது.

பதிப்புக்குழு