பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

        பாடுவ தன்று பழகிடும் சராசரி
        மனிதனைப் பாடும்; மனிதனைப் பேணும்.
        ஈரா யிரம்ஆண் டுகளின் முன்னர்
        உலகம் இப்படி இருந்தது இல்லை
        நெடுந்தொலை வாகப் பிரிந்து கிடந்தது'
        பழகும் பண்பு இன்மையால் அந்நாள்
        ஒருல காக இல்லை; உறவிலை.
        முத்தும்முத் தமிழும் கொழித்தநம் தமிழக
        வரைப்பில்மு வேந்தர்செய் வம்பும் கணக்கில
        பேதைமை நிறைந்து பெருகிய அந்நாள்
        பேதங் களைந்து பெருமையைச் சேர்த்த
        வள்ளுவர்க் கீடுவை யகத்தினில் யாரே?
        சண்டையும் போடலாம், சதியும் செய்யலாம்
        கொலையும் புரியலாம் என்றெலாம் கூறும்
        நூல்களும் உண்டு இவற்றினை நோக்கின்
        ஒன்றாக நல்லது கொல்லாமை என்று
        ஒருகுரல் கொடுத்தே ஒதிய குறளுக்கு
        ஈடொரு நூலெங் கெழுந்தது? கூறிர்!
        பாரிடை வாழ்க்கை பரந்து பட்டது
        உயிரின நாயகன் உடலெனு ஆடையை
        உடுத்தி உலக மென்னும் அரங்கில்
        வாழ்க்கை நாடகம் மன்பதை என்னும்
        பார்வை யாளர்முன் ஆடுகின் றனனே!
        அவை, களிப் பெய்த ஆடுவோ ருண்டு
        அவை, முகஞ் சுருங்க ஆடுவோ ருண்டு
        அவை, அஞ் சிடவே ஆடுவோருண்டு
        அவை, நைந் தழவும் ஆடுவோருண்டு
        ஆனால் ஆசான் வள்ளுவன் குறளில்
        அவைமகிழ் வெய்தவும் ஆடுவோன் மகிழவும்
        அனைத்துப் பொருட்கும் ஆதியாய் நிற்கும்