பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


        அகர முதல்வன் அகம் மகிழ்ந் திடவும்
        ஆடுந் திறனை மனிதன் அடைந்திட
        ஆக்கி ஆக்கி அணியென அளித்தான்!
        வள்ளுவன்,
        அடித்து வளர்க்கும் ஆசா னல்லன்
        அணைத்துக் கோழை யாக்குவோ னல்லன்
        துறைதொறும் துறைதொறும் மனிதனைத் தூண்டி
        உயிரிற் கலந்து உடலிற் கலந்து
        வளர்த்திடு கின்ற பேரா சிரியன்!
        அறிவுத் துறையில் அருமை வள்ளுவன்
        பேரா சிரியனாய்ப் பிறங்கிடு கின்றான்
        குறையினைக் காட்டிக் குணம்தரும் பரிவில்
        அன்னையாய்த் திகழ்வான்; அரும்பிணி அகற்றும்
        பீடுசால் வாழ்வைப் பெற்றுத் தருவதில்
        மருத்துவன் அவனே! மானுடச் சாதி
        மாட்சிமை எய்தும் இலட்சிய வாழ்வினை
        ஏற்றிடச் செய்வதில் இணையிலாத் தலைவன்!
        இங்ஙணம் பலர் புகழ் ஞாயிறே போல
        இயங்கிடும் வள்ளுவப் பெருமகன் ஏற்றம்
        வாயெலாம் இனிக்க பாடினோம்! பாடிப்
        பரவிப் பரவச முற்ற வேளையில் '.
        வள்ளுவன் நம்மெதிர் வந்து தோன்றினன்.
        கண்ணிர் மல்க கமலத் திருமுகம்
        வாடித் துயர வடிவமாய் நின்றான்!
        ஐயா, எனஅவன் அடியினில் வீழ்ந்து
        வணங்கி நின்று "மாட்சியிற் பெரியோய்,
        துன்பம் சுடச்சுட ஒளிபெறும் வாழ்க்கை
        என்றே ஒதிய இணையிலாப் புலவ,
        உமக்குமோ துன்பம் உற்றது? சுடச்சுட
        ஒளிதரும் துன்ப மதற்கு துளங்கல்