பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


        எந்தமிழ் நாட்டு மக்களைக் காணின்
        கலங்கா திருக்க என்மனம் கல்லோ?
        சந்தடி மிக்க சாதிகள் கடந்த
        புத்தம் புதிய உலகினைக் காண
        விரும்பினேன் அதனால் அருங்குறள் நூலில்
        நந்தமிழ் நாட்டுப் பெயரையும் மறைத்தேன்
        தாய்மொழிப் புகழையும் சாற்றினே விைல்லை.
        இத்தகு பொதுமை ஏய்ந்தநம் குறளைக்
        கையினிற் கொண்டும் கரவுநெஞ் சுடனே
        வேற்றுமை காட்டி வேதனை பெருக்கல்
        நெறியோ? முறையோ? நிகழ்த்துக. அன்றியும்
        'ஆகுல நீர பிற வென் றறைந்ததை
        ஒர்மின், ஒர்மின்! விழவொலி போதும்!
        விதித்த நெறியினை மதித்துநீர் ஏற்பீர்
        ஒருகுல மாவீர் உற்றநோய் தீர்ப்பீர்
        உயிர்க்குறு துணையாய் உதவிகள் புரிவீர்
        வீடும் வீதியும் தூய்மை செய்தல்போல்
        "மனத்துக் கண்மா சில்லா வாழ்க்கை
        வாழும் நெறியினை வகைதெரிந் தேற்பீர்!"
        என்றான் வள்ளுவன் ஈண்டுவந் திருக்கும்
        வண்டமிழ்ப் புலவீர்! தேவை மாநகர்
        சாந்தா லாகி கோட்டை யன்று.
        தேவ கோட்டை! தெள்ளு தமிழின்
        சுவையினைக் கண்டு துரய்தமிழ்க் கோட்டை!
        தேவும் காட்டுவர் தேவையும் நிறைப்பர்
        பொருளின் தேவையை அன்று உயிருக்கு
        உறுதி பயக்கும் ஒளிச்சுவை சேர்ப்பர்
        இவர்முன் பாடுவீர் எழிற்றமிழ்க் கவிகாள்
        வள்ளுவன் அடிச்சுவ டொட்டிப் பாடுக
        குப்பைகூ ளங்களைக் கோபுர மாக்கேல்!