பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 கவியரங்கக் கவிதைகள்

53


        என்றே வள்ளுவன் கண்டசான் றோனை
        வள்ளி யப்பராம் வளமார் கவிஞர்
        சாற்றிடக் கேட்டுச் சால்பினைப் பெறுவோம்!

முடிப்பு:

        வண்மைத் தமிழில் வள்ளுவன் தந்த
        சால்பினை வள்ளி யப்பன் தக்கவா
        றுரைத்திடக் கேட்டோம்! உலகிடை
        வாழ்ந்து காட்டுதல் நந்தம் கடமையே யன்றோ?


7. கவிஞர் பழனி. இளங்கம்பன்

அறிமுகம்:

        வையக வாழ்க்கை வளமுற அமையக்
        காதல் சிறந்தது காண்! என் பர்எனின்
        காதல்சா தித்த காரியங் களைவிட
        நயப்புறு நட்பினால் நாட்டினில் பலப்பல
        சாதனை நிகழ்ந்ததைச் சரித்திரம் பேசும்!
        வாழ்வியல் வடித்துத் தந்த வள்ளுவன்
        செயற்கு அரியயா வுளநட் பதுபோல்
        என்றே ஒதினான்! நன்றே மனிதர்
        மறைப்பன மறைத்து மாண்பினைக் காட்டும்
        ஆடை யணிந்து பீடுற வாழ்தலை.
        மானம் என்றே மதித்தனர்! நீட்டி
        மடக்கிக் கட்ட வாய்த்தநான் குமுழம்
        தான்கிடைத் திலதெனின் சாண்முழத் துணியைக்
        கோவண மாகக் கொண்டுவாழ்ந் திடலாம்!
        இவ்வகை மானம் போற்றும் இயல்பில்
        பழகிய உடலில் உடைநெகிழ்ந் திழப்பின்
        வினாடிஒன்றுக்குள் மேவிக் கையது