பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தேவா திகளின் பெயரினில் செறிந்த
கதைகள் உள்ளன. கற்பனைத் தேவர்கள்
மனத்தால் உயர்ந்தோர் எனப்பெயர் சூட்டிக்
கொண்டவர் செய்த குறைபல வுண்டு.
பெண்ணா சையும்பெரும் பதவி யாசையும்
பிடித்துக் கலகம் விளைத்துக் கொண்டதை
ஆழமாய் நினைத்தால், மேலாம் மனிதர்கள்
சிரிக்கத் தக்கன! இதனையே செந்தமிழ்
வள்ளுவன் “தேவர் அனையர் கயவர்
என்றான்! கயமைப் பண்புளோர் எவர்க்கும்
கேடு செய்பவர்; கீழ்மையே எண்ணுவர்.
கயமையைக் கண்டால் கடிது சாடுக”
என்றான்! இந்நெறி ஏய்ந்த கயவனை
மிடுக்குத் தமிழில் முழங்கி விளக்கிட
மதியிற் சிறந்த மரியதாஸ் வருகிறார்.

முடிப்பு:

நெஞ்சுதொட் டிழுக்கும் நிறைகவி மொழிந்த
மரியதாஸ் கயமையை மரிக்கச் செய்தார்;
மாண்புறு நலங்கள் தான்பல கொணர்ந்தார்!
இப்படிக் கவிஞர் செப்பிய எண்மரை
வள்ளுவன்பார்வையில் தெள்ளிதின் உணர்ந்தோம்!
இணையிலா வள்ளுவன் ஏற்றமார் குறளின்
துணையினால் வாழிய வையகம் தொடர்ந்தே!