பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

57


4. தந்தை பெரியார் 91ஆவது
பிறந்தநாள் விழாக் கவியரங்கம்


தஞ்சாவூரில் 17-9-69இல் நிகழ்ந்த

தந்தை பெரியார் (ஈ. வெ. ரா) அவர்களின்

91-வது பிறந்தநாள் விழாக் கவியரங்க


முன்னிலைக் கவிதை

பூவுல கினிற்பொற் புடைத்தமி ழகத்தில்
கல்தோன்றி மண்தோன் றாக்கா லத்தே
முன்தோன்றி மூத்த தொன்மைக் குடியினர்
தமிழ்க்குடி யினராம்! தரணியில் அவரே
புகழ்க்குடி யினராய்ப் பொலிந்தவ ராவார்!
முந்தைநூ றாயிரம் ஆண்டுகள் முன்பே
மூதறி வதனால் முத்தமிழ் கண்டதும்
வையகத் தினில்வாழ் வாங்கு வாழ்ந்திடும்
வகையும் முறையும் மாண்புறு காதலும்
கவினுறு கலையும் கடலது கலக்கக்
கலங்கள் இயக்கும் திறனும் வீரமும்
சீர்மிகு செப்பம் திகழ்நல் லாட்சி
கண்டதும், புகழினைக் கொண்டதும் தமிழினம்!
ஆயினும் என்ன? அவலமே உற்றது!
வளர்பசு மரத்தில் தழைபுல் லுருவிபோல்
ஒட்டி யும்உற வாடியும் தமிழ்உரம்
கெட்டிடச் செய்தது அயல்வழக் காமே!
அருமைத் தமிழ்நா டதனில் கொடிய
பேதம் வளர்த்தும் மொழியில் நெறியில்
நஞ்சினைக் கலந்தும் நலங்கெடச் செய்தது!
ஒராண் டிற்கோர் உயர்பாட் டளித்த

கு.xιν. 5.