பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

59


பொல்லா நெறியினைப் புனிதமா முனிவர்
திருமூ லரவர் ஒரோவழி மறுத்தும்,
தென்னகத் திருவிளக் காய்நூற் றாண்டது
ஏழினில் தோன்றிய ஏந்தெழில் ஞாயிறாம்
அப்ப ரடிகள் சாடியும் சதுரப்
பாடுடைச் சூது செத்தபா டில்லை!
இருளே சூழ்ந்து படர்ந்து செறிந்தது!
இந்த நிலையில் ஈரோடு தந்த
ஏந்தல் ஏற்றமார் தமிழினம் தனக்கே
தலைமை தாங்கினன்! சிந்தனை ஒன்றே
உலகம் திருந்திட உற்ற வழியென-
பகலவன் ஒளியினும் பகுத்தறி வொளிமேல்
கண்மூடிப் பழக்கம் மண்மூடிப் போகச்
செய்யவேண் டும்மென வெய்யோன் போலத்
தமிழின வாழ்வே தம்வாழ் வென்றும்
தமிழினம் ஒன்றே தம்மின மென்றும்
தமிழின உயர்வே தம்உயர் வென்றும்
தமிழின மகிழ்வே தம்மகிழ் வென்றும்
வள்ளுவன் வகுத்துத் தந்த குடிசெயல்
வகையினைப் போற்றும் தகைசால் பெரியார்
மாற்றா ருக்கிடி! மருள்நெறி யினர்க்கு
மருந்து! தமிழினப் பகைக்கு மாருதம்!
தமிழினத் தந்தை! தழுவிப் பழகிடும்
இனியபண் பாடு! குனியும் தமிழனைத்
தலைநிமி ரச்செய் திடுமுது கெலும்பு!
இழிதகை நீக்கி ஏற்றம் தரும் ஓர்
இணையிலா வீரர்! கணைமொழிப் பெரியார்
வாழும் தலைமுறை தமிழகத் தின்பொற்
காலத் தலைமுறை! அவர்படை சார்ந்த
அருமைத் தலைமகன் அண்ணா - தமிழினத்