பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

63


4. கவிஞர் குடியரசு

குடியர சென்னில் கூடி நடாத்தும்
அரசது வாகும். முடியர சில்போர்
உண்டு குடியர சினில்அஃ தில்லை.
ஆனால் இந்தக் குடியர சோ, இந்
நாட்டின் ஏழைக் குடியர சேயோ?
எல்லாருக்கும்,
வாக்கும் உண்டு; வயிறும் உண்டு.
பலர்வயி றின்னும் நிரம்பிட வில்லை
உழைப்பவர் வயிற்றினை அடித்துக் கொழுக்கும்
சிலருடைப் பெட்டி நிரம்பு கின்றது;
சில்லறைக் காசும் புழங்கு கின்றது!
இவ்விழி நிலையில் நம்குடி யரசு
நாடெலாம் அறிந்த கேலிக் கூத்தாம்!
இந்தக் கூற்று எமதுகூற் றன்று
பாரெலாம் வாழப் பரிந்தே யுழைத்தே
நேருவின் கூற்றாம்! நேருறு கவிஞர்
குடியர சும்அக் குடியர சாமோ?
“போராட் டப்புயல்” பற்றிப் புகலுவார்.
தமிழினத் திற்குப் பெரியார் தென்றல்;
அவ்வின வாழ்வை பறிக்கும் அயலினம்
கண்டு நடுங்கிடும் கடும்புயல் பெரியார்!
ஒயாப் பெரும்போர்! உடைத்தலும் எரித்தலும்
அவர்தம் போர்முறை! ஏடெடுத் தெழுதலும்
அவர்தம் போர்முறை! ஆண்டிற் கிழமே
ஆயினும் போரில் பாய்புலி யாவார்!
புலியும் சிலநாள் படுத்துறங் கிடும்இவ்
வெண்புலி யோயெனில் மருத்துவ மனையிலும்
படுத்துறங் காது! மிடுக்குடன் அதனைக்
குடியர சுக்கவி குறித்திட வந்தார்.