பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 கவியரங்கக் கவிதைகள்

71


முடிப்பு:

முந்துசெந் தமிழ்க்கவி முஸ்தபா தந்த
செந்தமிழ் வீரம் சிறக்கநாம் கண்டோம்
வீரம் கொண்டோம்! நாமெலாம் நெஞ்சில்
ஈரம் கொண்டோம்! இந்தநன் னாளிலே
இராம நாத புரமா வட்டம்
குருதி கொட்டும் செருகளத் தாடியது
போதும்! இனிமேல் பூசல்கள் வேண்டா
அனைவரும் ஒருகுடும் பம்என் றுணரவும்
அன்பினை வளர்க்கவும் வீரம் வேண்டும்
வருத்தும் பிரிவினை, வறுமையை எதிர்த்துப்
போராடு கின்ற வீரமே, வேண்டும்!
வறுமை ஒழிப்புப் போரினில் நம்மை
வழிநடத் தும்தள பதிபாஞ் சாலம்
தந்த செம்மல் ராஜீவ் வாலியா
வழிநின் றுழைப்போம்! வறுமையை ஒழிப்போம்!
தேடும் செல்வம் அனைத்தை யுமே, சசி
சேகர் வழங்கிடும் திட்ட நெறியினில்
சேர்ப்போம்! இச்செயல் சிறந்த வீரமே!

புலவர் ஜி. பாலசுப்பிரமணியம் - அறிமுகம்

“பொங்கல் சிறக்கவே! - வளத்தினால் !”



வளத்திற் கே, வழி காண்போம்! வலிமை சேர்
இளமை நலத்துடன் ஏற்றமார் உழைப்பில்
ஈடு படுதலே வளம் பெறும் வழியாம்!
பைந்தமிழ்க் கவிஞர் பால சுப்பிர
மணியம் வளத்தினைக் காட்ட வருகிறார்!
பாலன் அல்லவா? அவர்காட் டிடும்வளம்
காண்போம்! அவர்தம் கவிதையைக் கேட்போம்.