பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

73



6. காரைக்குடி அண்ணா விழாக்
கவியரங்கம்

காரைக்குடி அண்ணா தமிழ்க் கழகம்

அண்ணர் விழா 12-10-1986

கவியரங்கம்

தலைமைக் கவிதை



அலைகடல் சூழ்ந்த உலகினில் உயர்ந்த
இமயம் முதலாக் குமரிஈ றாகப்
புகழ்விரித் தொளிரும் புண்ணிய பூமியில்
வட வேலவன் குன்றும் தென்குமரிக் கடலும்
எல்லையாக் கொண்ட எந்தமிழ் நாட்டில்
வரலாற் றுக்கு விசைதரு கடமையும்
எவரையும் மதிக்கும் இனியகண் ணியமும்
வளரும் மானுட குலத்தின் சீலமாய்
மதிக்கப் பெறும்நற் கட்டுப் பாடும்
எனும்இவை மூன்றனுக் கரண்செய் திடவும்
நாமமது இழந்து கிடந்தநாட் டுக்குத்
தமிழ்நாடு எனப்பெயர் தகவுடன் சூட்டிப்
பிறங்கிடச் செய்யவும் வந்து உதித்தவர்
சொல்வேந் தராம்நம் அறிஞர் அண்ணா!
நயத்தகு நாக ரிகம்இது வெனவழி
நடத்தவும் வந்து உதித்தவர் அண்ணா!
அவர்தம் புகழினை அவனியிற் பரப்பும்
அண்ணா விழாவில் தண்ணார் தமிழில்
கவிமழை பொழிய வந்துள கவிஞர்காள்!
அறிஞர் அண்ணா போல்,
பழகுதற் கினிய பண்பு நலமும்
சீரிய தோர்செயல் திறனும் பெற்ற

கு.XIV.6.