பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

77


பாட்டினில் உறுதிப் பாட்டுடன் நின்றார்!
தாம்பிறந் திட்ட தகைசால் மண்ணுக்குத்
“தமிழ்நாடு” எனப்பெயர் சூட்டி மகிழ்ந்தார்
அண்ணா காட்டிய அருமைநன் னாடு
இந்நாள் வரையும் மலரவே இல்லை
அவர்வழி நடந்து அவர்வழி நாட்டைப்
படைப்போம்! மக்கள் துயர்துடைப் போமே!

கவிஞர் இளசை. எஸ். சுந்தரம் - அறிமுகம்


இளசை சுந்தரம் எம் “கலைச் செல்வர்”
வானொலி அண்ணா என்று மழலையர்
மகிழ்ந்து அழைத்திடும் மாண்பினை யுடையவர்;
இன்தமிழ்க் கவிஞர் இனியபண் பாளர்
எனது உனது புனிதம் என்னும்
வரையறை கடந்த சிந்தனை யாளர்;
அண்ணா வழியில் சுதந்திரம் இதுவெனக்
காட்ட வருகிறார்! கவிதை தருகவே!

முடிப்பு:

வளமிகு தமிழின் நலமிகு கவிதையால்
காட்டினார் சுதந்திரம், கலைச்செல்வர் சுந்தரம்!
சுதந்திரம் என்பது, மானிடச் சாதியின் மூச்சுக் காற்று!
அறிவும் அறிவறிந் திட்டஆள் வினையும்
சுதந்திர மாக வாழும் மானிடச்
சாதிக்கு உண்டு! சுதந்திரம் போலச்
மாயை காட்டி முடக்கிடக் கொடிய
சிறையினில் கிடந்திடும் மன்பதை உலகம்!
அண்ணா எந்த வழியினில் நின்றார்?
சுதந்திர மாக வளமொடு வாழலாம்